வியாழன், 23 மே, 2013

அது ஒரு காகித கல்யாணம்

மனிஷாவின் தாய் இந்திய  தந்தையோ  வெள்ளைக்காரன்
அவள் சில சமயங்களில்

ஒரு வெள்ளைகாரி போலவும் சிலசமயம் அசல் பஞ்சாபி போலவும் பேசுவாள். ஏராளமான குழப்பங்கள் அவள் மனதில் இருப்பது எனக்கு தெரியும், அவளுக்கு தான் ஒரு இந்திய வம்சாவளி என்ற பெருமையும் அதேசமயம் இந்தியர்கள் மிக மோசமானவர்கள் என்ற அபிப்பிராயம் சேர்ந்தே இருந்தது.
போஸ்டன் பகுதியில் சதா புதிதிதாக இந்தியர்கள் பாகிஸ்தானியர்கள் போன்ற தெற்காசிய மக்கள் வந்த வண்ணமே இருப்பார்கள் . எப்போது புதியவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை மிக அதிகமாக இருந்ததனால் அவளுக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தனர்.
சதா இந்தியர்களை  திட்டிய படியே அவர்களுக்கு ஓடி ஓடி உதவிசெய்த வண்ணமே இருப்பாள் .
சுமார் முப்பது வயதாகியும் சரியான கணவனோ காதலனோ அவளுக்கு அமையவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏராளமான கோரிக்கைகள் அவளை நோக்கி வந்தவண்ணம் இருந்தன . ஆனால் அவளுக்கு எதோ ஒருவரையும் பிடிக்கவில்லை. திடீரென அவனை கல்யாணம் செய்ய போகிறேன் என்று எல்லோருக்கும் சொல்வாள் . பின்பு  சில நாட்கள் கழிந்ததும் அவனை எனக்கு பிடிக்க வில்லை அவன் வெரி boring என்பது போன்ற ஏதாவது ஒரு நொண்டி காரணம் சொல்லுவாள் .
மனிஷா மீது உண்மையான அக்கறை கொண்ட எல்லோருமே ஏறக்குறைய நம்பிக்க இழந்து விட்டனர் , இவளில் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது எல்லாவற்றையும் தட்டி கழிக்கிறாள் என்று அலுத்து கொண்டனர்,
ஒரு நாள் என்வீட்டுக்கு வந்து தனக்கு திருமணம் டெல்லியில் நிச்சயமாகி இருக்கிறது என்று சொன்னால் . போட்டோவும் காட்டினாள்.

எனது கியுரியசிட்டி மேலிட யார் இந்த ப்ரோபோசலை கொண்டு வந்தது போன்ற கேள்விகளை கேட்டேன். அவளும் மிக மகிழ்ச்சியாக விலாவாரியான பதில்களை சொன்னாள் .
எனக்கு எல்லாம் விளங்கி விட்டது , மிக பெரிய மோசடி ஒன்று நடை பெற போகிறது , மனிஷாவை யாரோ ஒரு டெல்லி வாலாக்கள் ஏமாற்ற போகிறார்கள் .அவள்  மூலமாக அமெரிக்கா வருவதற்கு முயற்சி செய்யும் கும்பலிடம் இந்த அதி புத்தி சாலியான மனிஷா  வசமாக சிக்கி விட்டாள் என்று எனது உள்மனது அடித்து சொன்னது.
சில நாட்கள் சென்றதும் மெதுவாக எனது சந்தேகங்களை அவளிடமே  சொல்ல ஆரம்பித்தேன் .
ஆனால் அவள் தனது பிடிவாத குணத்தால்  எனது ஆலோசனையை கேட்கவில்லை , ம்ம் விதி விட்ட வழி என்று இருந்து விட்டேன்,
பின்பு நடந்தது எல்லாம் சினிமா படங்கள் பிச்சை வாங்க வேண்டும்! அவ்வளவு தில்லு முல்லு.
அந்த டெல்லி வாலாக்கள் தாங்கள் பெரிய பாரம்பாரிய குடும்பம் என்றும் தங்களின் உறவினர்கள் லேசில் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டார்கள் என்றும் அவளை நேரில் பார்த்தால் அவளின் அழகு குணம்  போன்றவற்றால்
அவர்கள் மனம் மாறுவார்கள் என்று தாம் நம்புதாக நாடமாடிஇருந்தார்கள் .
தங்களது விருந்தாளி போன்று டெல்லிக்கு  அவர்களே அழைத்து செல்வதாகவும் அங்கு அவளுக்கு தங்கள் வீட்டு பையன்  விஜயை பிடித்திருந்தால் மீதி யை பற்றி யோசிக்கலாம் என்று கூறினார்கள் .
விதி மிகவும் வலிது  போலும், மனிஷா ஏதோ டெல்லிக்கு இலவச சுற்றுலா போல் செல்வதாகவும் எல்லாம் சரியாக வந்தால் டெல்லி மாப்பிளை இல்லாவிட்டாலும் உல்லாச பிரயாணம் என்று அதி புத்திசாலித்தனமாக எண்ணி நல்ல சந்தோஷத்தோடு அவர்களோடு சென்றாள் .
அங்கு அவர்கள் இவளை வீட்டிற்கு வெளியே விடவே இல்லை,
அவர்கள் அமெரிக்காவில் இருக்கும் போது மனிஷாவிடம் நடந்து கொள்ளும் முறைக்கும் தற்போது டெல்லியில் நடந்து கொள்ளும் முறைக்கும் தலைகீழ் வித்தியாசம் ,
ஏறக்குறைய ஒரு அடிமை பெண் போலவே நடத்தப்பட்டாள் ,
அவளுக்கு கொஞ்சம் புரிய ஆரம்பித்தது,
அவளது சம்மதம் என்று ஒன்றை கேட்காமலேயே அவர்கள் வீட்டு பையன் விஜய்க்கும் அவளுக்கும் திருமணம் என்ற பெயரில் வீட்டில் வைத்தே சில நண்பர்களை கூப்பிட்டு ஒரு சிறு கல்யாணம் நடத்தினார்கள்.
அந்த பையனோ ஒன்றும் தெரியாத ஒரு மக்கு மாதிரி இருந்தான் , ஆனால் தாம்பத்தியம் என்ற பெயரில் தினசரி பாலியல் பலாத்காரமே அரங்கேற்றும் அளவுக்கு விபரமானவனாக இருந்தான் ,
அவள் தற்போது எல்லாவற்றிற்கும் பயந்தாள் ,
ஜாடை மாடையாக அவர்கள் பேசும் பேச்செல்லாம் சற்று கறாராக இருந்தது ,
ஆனாலும் அவள் மனதில் ஒரு சபலம் , விஜய் அமெரிக்காவிற்கு வந்தால் சற்று Civilize ஆகிவிடுவான் என்று நம்பினாள்  அல்லது விரும்பினாள் .
தனக்கு கிடைத்த சந்தர்பங்களில் எல்லாம் விஜயோடு பல விடயங்களையும் புரிய வைக்க முயற்சி செய்தாள்.
பின்பு அவள் அமெரிக்காவிற்கு வந்ததும் தனது கல்யாண விபரங்களோடு அமெரிக்க விசாவிற்கான விண்ணப்பத்தை அனுப்பினாள்,
அவளது நல்ல காலம் அதிகாரிகள் அவளது திருமணத்தில் ஏதோ தில்லுமுல்லு நடந்திருபதாக சந்தேகபட்டார்கள் ,
அவளிடம் மேலும் பல கேள்விகள் கேட்டு துளைத்தார்கள் , அவளும் தனக்கும் கூட ஆரம்பத்தில் சந்தேகம் இருந்ததாகவும் ஆனால் விஜய் நல்லவர் என்றும் கூறினாள் ,
அவர்கள் உடனேயே இந்த திருமணம் போலியானது என்று எண்ணுவதாக பதில் அனுப்பி விட்டனர் ,
இதை சற்றும் எதிர்பார்க்காத விஜயின் அண்ணனும் அண்ணியும் வந்து மனிஷாவை வறுத்து எடுத்தனர் ,
விஜய் உனது கணவர் எப்படியாவது அப்பீல் பண்ணி செலவு செய்து நீதான் அவனை எடுப்பிக்க வேண்டும் என்று மிரட்ட தொடங்கினர்.
 தவறுக்கு மேல் தவறு செய்வதையே வாடிக்கையாக கொண்ட மனிஷாவும் கடன் வாங்கி வக்கீலை பிடித்து அப்பீல் செய்தாள் ,
ஆனால் அதிலும் சரிவரவில்லை ,
இந்த நிலையில் விஜயின் குடும்பத்தினர் விஜய்க்கு வேறொரு அமெரிக்க பெண்ணை தேடிப்பிடித்து விட்டனர் ,
இப்போது மனிஷாவுக்கும் விஜய் க்கும் நடந்த திருமணத்தை விவாகரத்து செய்ய வேண்டும் ,
டெல்லியில் காசை அள்ளி வீசி செய்து விடலாம்,
அவர்களுக்கு மனிஷாவின் சம்மதம் தேவையாக இருந்தது ,
ஒருநாள் ஆறு ஏழு தடியன்கள் மன்ஷாவின் அறைக்குள் புகுந்து அவளின் கழுத்தில் கத்தியை வைத்துகொண்டு கையெழுத்து இடுமாறு அடித்தனர் ,
அவள் கையெழுத்து போட்டாள்  உயிர் தப்ப வேண்டுமே?
இது நடந்து சில வருடங்களாகி விட்டன .அவளுக்கு இப்போ கல்யாணம் என்றாலே ஒரே பயம் .
ஆரம்பத்தில் இருந்தே தான் ஏமாற்ற பட்டிருக்கிறோம் என்பதை  உணர்ந்து கொள்ள நீண்ட நாள் பிடித்திருக்கிறது 
நீண்ட காலமாக அமெரிக்காவில் வாழ்ந்த மனிஷாவுக்கு தாய்நாடு மீது அளவு கடந்த ஈடு பாடு , எதையும் இலகுவாக நம்பிவிடும் அளவு வாழ்வில் வெகுளியாக இருந்திருக்கிறாள்
இப்போது அந்த கனவு கலைந்து விட்டது ,

கருத்துகள் இல்லை: